கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் பிரதான குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் செல்லும் குழாயில், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குடிநீர் வடிகால் அதிகாரிகள் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமுறை குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் : ஆறு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்... இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ஏற்கனவே மனு