மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, 75 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய், தங்கம் 75 கிராம், வெள்ளி 317 கிராம் கிடைக்க பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில், அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த காணிக்கை, பத்ரகாளி அம்மன் கோயில் தக்கார் மற்றும் துணை ஆணையர் முன்னிலையில் மதுரை அன்னபூரணி சேவா சங்க உறுப்பினர்களால், எண்ணும் பணி நடைபெற்றது. இந்த காணிக்கையில் ரொக்கமாக ரூ.75,71,000 மற்றும் தங்கம் 75 கிராம், வெள்ளி 317 கிராம்,கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.