காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த காதலன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ படித்த சக்திவேலுக்கும், பாடகம் கிராமத்தை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி ரோஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில், ரோஷினியை பாடகம் காப்புக்காட்டுக்கு அழைத்துச் சென்ற சக்திவேல், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதற்கு ரோஷினி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அங்குள்ள கிணற்றில் ரோஷினியை தள்ளி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.