கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கரூர் மாவட்டத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற லாரி, சாமல்பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையேரம் உள்ள கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் சுபம் லேசான காயங்களுடன் தப்பினார்.