சென்னை தண்டையார்பேட்டையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுமி மீது பின்னால் வந்த குப்பை லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். கைலாசம் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் காவ்யா, அப்பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவியின் ஸ்கூட்டரில் தமது சித்தி வீட்டிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது.