ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும் என கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், தவெக தலைவர் விஜயிடம் அரசியல் சாதூர்யம் உள்ளதா என்பது தனக்கு தெரியவில்லை என்றார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல என்றும், உடல் முழுவதும் சிந்திக்கிற திறமை உள்ளவரால் மட்டுமே அனைவரையும் அரவணைத்து செல்ல முடியும் எனவும் கூறினார்.