மறைந்த எம்.எல்.ஏ.வுக்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவேசப்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சிலை திறப்பு விழாவில், தன்னை பேச அழைக்காமல், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவாவை அழைத்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆத்திரமடைந்தார்.