வேலூரில் பெய்த கனமழையால் தொரப்பாடி மற்றும் சதுப்பேரி ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 42-வது வார்டுக்கு உட்பட்ட அப்துல்கலாம் தெரு, கே.கே.நகர் விரிவு ஆகிய பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். தொரப்பாடி மற்றும் சதுப்பேரி ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு முறையான கால்வாய் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.