திருவாரூர் அருகே கூலி தொழிலாளி தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த சோள வியாபாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காக்காகோட்டூரை சேர்ந்த சங்கர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, 10 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வைத்திருந்த பர்ஸ் தவறி சாலையில் விழுந்தது. அதனை மீட்டு ஒப்படைத்த சோள வியாபாரி செல்வத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.