கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஈசாந்தை கிராமத்தில், உரிய அனுமதியுடன் ஏரியில் மண் எடுக்க வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னசேலத்தில் இருந்து திருவண்ணாமலை வரை நடைபெறும் ரயில்வே பணிக்காக அரசு அனுமதி பெற்று ஈசாந்தை ஏரியில் கிராவல் மண் அள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில், மண் எடுத்துக் கொண்டிருந்த வாகனங்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மீண்டும் மண் எடுக்க சென்ற ஜேசிபியை பெண்கள் சிறைபிடித்ததால் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.