உலக நலன் வேண்டி பழனியில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பானியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தர் புலிப்பாணி ஜீவசமாதியில், பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து ஜப்பானியர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.