நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை கன்னத்தில் அறைந்த நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பேருந்தில் பயணி ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் ஏற முயன்ற போது, அவரை நடத்துநர் சேதுராமலிங்கம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பயணியை நடத்துநர் சேதுராமலிங்கம் கன்னத்தில் அறைந்துள்ளார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட்ட நிலையில், அரசு போக்குவரத்து கழகம் உரிய விசாரணை நடத்தி நடத்துநர் சேதுராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.