நாமக்கல் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டியில் எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக பாறைகளை வெட்டி எடுத்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கூழாங்கரடு பகுதியில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக பாறைகளை வெட்டி எடுத்த விவகாரம் தொடர்பாக கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விட்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேரையும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த கனிம வளம் மற்றும் புவியியல் துறை ஆய்வாளர் நந்தகுமாரை தமிழக கனிம வளத்துறை ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.