தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 20ஆம் தேதி, அடுத்த வாரம் திங்கள்கிழமையன்று, தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு பகுதியில், பலகாரங்கள் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறுக்கு, அதிரசம், அச்சு முறுக்கு, முந்திரி கொத்து, தேன்குழல் முறுக்கு, குழி அப்பம் உள்ளிட்டவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர் வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தினமும் நான்காயிரம் முறுக்கு செய்து வந்த நிலையில், இந்த முறை ஒரு நாளைக்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறுக்குகள் தயாரித்து, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.