திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நிலத்தகராறில் பணியாட்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ருத்திராபாளையம் பகுதியில் உள்ள நிலத்திற்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரு தரப்பினர் கனரக வாகனம் மற்றும் கார், பைக்குகளில் வந்து அங்கு பணியார்களாக இருந்த ரிஜூ மற்றும் கார்த்திக் ஆகியோரை அடித்து கட்டிப் போட்டு நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டை தரைமட்டமாக்கி தப்பிச் செல்ல முயன்ற 5பேரை கிராம மக்கள் பிடித்தனர். Related Link கார் மோதியதில் பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு