விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்ற சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த கோபியின் உடலை மீட்ட நிலையில், நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.