கரூரில் கல்லூரி மாணவியை கடத்திய சம்பவத்தில் கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் படித்துவரும் ஈசநத்தம் கிராமத்தை சேர்ந்த மாணவி, கல்லூரிக்கு சென்றபோது கிரே கலர் ஆம்னி வேனில் வந்த இளைஞர் உள்ளிட்டோர் கடத்திச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த ஆம்னி வேன் கரூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.