விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, கோயில் காவலாளிகளை நள்ளிரவில் வெட்டிக் கொன்ற வழக்கில், உள்ளூர்காரனே உண்டியல் பணத்துக்கு ஆசைப்பட்டு, கொடூர கொலைகளை நிகழ்த்தியதோடு, நல்லவன் போல போலீஸ் முன்பே வேஷம் போட்டு, மக்களோடு மக்களாக தெனாவட்டாக வலம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசுக்கு சந்தேகமே வராத அளவுக்கு ஆக்டிங்கை போட்டு24 மணி நேரத்திற்கும் மேலாக சுத்தலில் விட்ட கொலையாளிக்கு போலீஸ் துப்பாக்கியால் பதில் சொல்லியிருக்கிறது. 2 காவலாளிகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் ஹயாக மக்களோடு மக்களாக, சகஜமாக சுற்றிய கொலையாளி, கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசிய காட்சிகளை பார்த்து, விசாரணை நடத்திய போலீசுக்கு ரத்த கொதிப்பே வந்திருக்கும்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில் சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், திங்கட்கிழமை இரவு பணியில், அப்பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.பகல் நேர காவலாளி மாடசாமி, காலை 6 மணிக்கு வந்த போது, காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டதோடு, சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டு, டி.வி.ஆர்-ஐயும் திருடி சென்றது தெரியவந்தது. பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய கொலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.காவலாளிகள் இருவரும் கொள்ளையை தடுக்க முயன்றபோது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த தனிப்படை போலீசார், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கோயிலுக்குள் இருந்த மற்றொரு சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளி விபரங்களை போலீசார் சேகரித்து கொண்டிருந்த போது, திருட்டு வழக்கு ஒன்றில் கண்டிஷன் பெயிலில் வெளியே வந்த வடக்கு தேவதானத்தை சேர்ந்த நாகராஜ் என்பவன், காவல்நிலையத்தில் அவசர அவசரமாக கையெழுத்து போட்டு விட்டு வெளியேறியதை கண்டனர். அப்போது, கோயிலில் கிடைத்த சிசிடிவி யில் இருந்த அடையாளங்கள் நாகராஜின் அடையாளங்களோடு ஒத்துப் போவதை நோட்டமிட்ட போலீசார், அவனை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், திங்கட்கிழமை இரவு காவலாளிகள் இருவரையும் கொலை செய்தது தாம் தான் என ஒப்புக் கொண்டு ஷாக் கொடுத்திருக்கிறான் நாகராஜ்.வேலை வெட்டி எதுவும் இல்லாமல் சுற்றி திரியும் நாகராஜுக்கு பிழைப்பே, திருடுவதும், வழிப்பறி செய்வதும் தான். இப்படியே பல வழக்குகளில் சிக்கிய நாகராஜ், கோயில் உண்டியலை குறி வைத்து நீண்ட நாட்களாக திருட்டுக்கு திட்டம் தீட்டி வந்திருக்கிறான். அந்த திருட்டு திட்டத்திற்கு நாகராஜ் குறித்த நாள் தான் திங்கட் கிழமை இரவு. வேறொரு திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தினமும் சேத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு கொண்டிருக்கும் போதே, நெஞ்சில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அடுத்த திருட்டுக்கு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலை குறி வைத்திருக்கிறான் நாகராஜ். திங்கட்கிழமை இரவு கோயிலுக்கு சென்ற நாகராஜ், உண்டியலை கொள்ளையடிக்க முயற்சிக்க, காவலாளிகள் குறுக்கே தடுக்க, 2 பேரையும் கருணையே பார்க்காமல் கொலை செய்திருக்கிறான்.பக்காவாக, பிளான் போட்டு சிசிடிவி பதிவுகளையும் தூக்கிச் சென்ற நாகராஜ், போலீஸ் விசாரிக்கும்போது எதுவுமே தெரியாதது போல ஆக்டிங் செய்திருக்கிறான். போலீசுக்கு பயந்து தலைமறைவானால் தான் சந்தேகம் வரும் என யோசித்து, மக்களோடு மக்களாகவே உலவி வந்திருக்கிறான்.கோயிலில், என்னென்ன நடந்தது? என்று, ஊர் மக்களிடம் போலீஸ் விசாரிக்கும் போது, போலீஸ் கண்முன்னே நின்று நடிப்பு திறமையை அவிழ்த்து விட்ட நாகராஜ், கொலைக்கு நீதி வேண்டும் எனவாய் கூசாமல் ஆவேசமாக, வாய் கிழிய பேசியிருக்கிறான். நாகராஜின் நடிப்பை பார்த்து அவன் மீது போலீசுக்கும் சந்தேகம் எழாமல் போனது. கடைசியில் சிசிடிவியை வைத்து தான், நாகராஜின் திருட்டு நாடகம் அம்பலமாகியிருக்கிறது. கோயிலில் இருந்து திருடிய பொருட்களை நாகராஜ் பதுக்கி வைத்திருந்த நிலையில், அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று பொருட்களை மீட்க சென்றனர். அப்போது, மறைத்து வைத்து இருந்த அரிவாளால் காவல் துணை ஆய்வாளர் கோட்டியப்ப சாமியை தாக்கி விட்டு தப்பியோட, சேத்தூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் அவனது காலில் சுட்டு பிடித்தார். இதில், காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரட்டை கொலைகளை இரவோடு இரவாக நிகழ்த்தி விட்டு, நீதி கிடைக்க வில்லை என்றால் பஸ் மறியல் செய்வோம் என்று, ஓவர் ஆக்டிங் போட்ட நாகராஜின் காலை துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்கிறது.ஏதோ சினிமா பாணியில் மொத்த போலீஸ் படையையும் ஏளனமாகநினைத்த நடிப்பு வில்லன் நாகராஜுக்கு, போலீஸின் பதில் காலை சுட்டதோடு மட்டும் அல்லாமல் இன்னும் காட்டமாகவே இருந்திருக்க வேண்டும் என்று, கிராம மக்கள் ஆதங்கப்பட்டனர். இதையும் பாருங்கள் - Cuddalore Crime | கரும்பு தோட்டத்தில் கொடூர கொ*ல, வெட்டி சாய்க்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்