கரூரில் மருந்தகத்தில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 23ம் தேதி காந்திகிராமம் டபுள் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதுபோல் சென்ற நபர் அங்கு வேலைபார்த்த பெண் ஊழியரிடம் செயினை பறிக்க முற்பட்டதாகவும், அப்போது பெண் பின்நகர்ந்து சாமார்த்தியமாக செயினுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த வீரணம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை தேடி வந்த தனிப்படை போலீசார், தெற்கு காந்தி கிராமம் அருகே பைக்கில் சென்றபோது கைது செய்தனர்.