அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுவது வேதனை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் ஒரு தலித் பெண் பாலியல் கொலை செய்யப்பட்ட போது பாஜகவினர் அமைதிகாத்ததாக குற்றம் சாட்டினார்.