செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவலர் குடியிருப்பில் வெடித்த மர்ம பொருள் நாட்டு வெடிகுண்டு என கண்டறியப்பட்டுள்ளது. மர்ம பொருள் வெடித்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு பாஸ்பரஸ் ரசாயனம் அடங்கிய பழைய நாட்டு வெடிகுண்டு உதிரி பாகங்கள் சிக்கின.