விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொத்தனாரை அடித்துக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தனர். திருவக்கரை பகுதியில் உள்ள அரசு கல்குவாரியில், கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல் மட்டும் பாலிதீன் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான விசாரணையில், கொல்லப்பட்டது, பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த கொத்தனார் ராஜதுரை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், துக்க வீட்டில் நடந்த மோதல் காரணமாக ராஜதுரையை அவரது நண்பர்களே அடித்துக் கொன்றது அம்பலமானது. இதனையடுத்து, சிவா, உதயா, மோகன்ராஜ், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.