நாமக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக கல்வெட்டி எடுக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர். கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான கரடு பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதாக வந்த தகவலையடுத்து கடந்த 19ஆம் தேதி நாமக்கல், சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட 21 வாகனங்களை நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் தப்பி ஓடினர். இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கூலிப்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் முருகன், வேட்டாம்பாடியை சேர்ந்த சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.