கன்னியாகுமரி மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் சில நாட்களாக அதிகமாகவே உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால், பழங்கள், குளிர்பானங்கள், இளநீர் வாங்கிச் செல்கின்றனர். பறவைகள், கால்நடைகள் மற்றும் வாத்து கூட்டங்கள் நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றன. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, நீர் நிலைகளில் இறங்கி ஆனந்த குளியல் இடுகின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் பகுதியில் குவளை மூலம் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன. அதில் சிட்டுக்குருவிகள் தண்ணீர் அருந்தி வருகிறது. மழையை எதிர்நோக்கி மனிதர்களும், கால்நடைகளும் காத்திருக்கின்றன.