திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் - அனுசியா தம்பதிக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். ஜோதிடம் பார்த்து வந்த ராஜேசுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில், ஞாயிறுக்கிழமை இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, மனைவி அனுசியாவுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வெட்டியதில் அனுசியா உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.