லால்குடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஜோதிடரை 3 நாட்களுக்குப் பின்னர் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் ஆதிக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் தனது மனைவி அனுசுயா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேல் மனைவி பேசாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மது மற்றும் கஞ்சா போதையில் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். தேனியில் பதுங்கி இருந்த கணவரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.