நாமக்கல்லில் கருத்து வேறுபாட்டால் மனைவியை SCREW DRIVERஆல் கணவர் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை அருகேயுள்ள வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்- பிருந்தா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிருந்தா கணவனை பிரிந்து நாமக்கல்லில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நண்பருடன் நாமக்கல்லுக்குச் சென்ற மணிகண்டன், ஆண் நண்பருடன் வாகனத்தில் சென்ற மனைவி பிருந்தாவை வழிமறித்து, தன்னிடமிருந்த SCREW DRIVERஆல் தலையில் குத்தியிருக்கிறார். இதில் பிருந்தா படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.