தேனி அருகே இடப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நபர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சுக்குவாடன்பட்டியில் வசித்து வரும் ரவிராஜ் என்பவருடைய மனைவி ஜனனிக்கு சொந்தமான இடத்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள சரவணன் என்பவர் மிரட்டி கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சரவணனின் மனைவி காவல் ஆய்வாளர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... தாக்குதல் நடத்தியதோடு விசைப்படகு சேதம்