தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூடலூரை சேர்ந்த பொன் விஜய் என்பவருக்கும், அவரது மனைவி இலக்கியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொன் விஜய் மீது இலக்கியா பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.