கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் ஹோட்டல் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளரின் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்ற காட்சிகளும், சிறிது நேரத்துக்குப்பின் நகைகளோடு வெளியே திரும்பி வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.