விஜய்யை பார்க்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு தொகுப்பாளர் என்கிற இலக்கை நோக்கி பயணித்ததாக த.வெ.க. மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய துர்காதேவி கூறினார். ஒரு பெண்ணாக நிறைய சவால்களை எதிர்கொண்டு இந்த இடத்திற்கு வந்ததாகவும், நடிகர் விஜய்யை தமது வாயால் மேடைக்கு அழைத்தது தன்னுடைய பிறவிப் பயன் எனவும் அவர் உணர்ச்சிபொங்கக் கூறினார்.