சேலம், காவேரி புரம்... நண்பன் அழைத்ததால் நம்பிச் சென்ற நபர். நைசாகப் பேசி மதுவை ஊற்றிக் கொடுத்து அரக்கத்தனம். போதை தலைக்கேறியதும் நண்பனை கற்களால் அடித்தே கொன்ற பயங்கரம். பல ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய நண்பனே, எமனாக மாறியது ஏன்? கொலையாளிகள் சிக்கியது எப்படி? இரவில் நடந்தது என்ன?சேலம் மாவட்டம், மேட்டூர் பக்கத்துல உள்ள கிராமம் காவேரிபுரம். இங்க உள்ள பாஸ்புட் கடைக்கு வாசல்ல ஆண் சடலம் கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்திருக்கு. உடனே சம்பவ இடத்துக்குப் போன போலீஸ், அந்த இளைஞர் யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ அங்க வந்த ஒருத்தரு, இந்த நபர் பக்கத்து கிராமத்த சேர்ந்த செல்வகுமாருன்னும், இந்த பாஸ்புட் கடையில தான் வேலை பாத்துட்டு இருந்ததாவும் சொல்லிருக்காரு. அதுக்கப்புறம், சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், செல்வகுமார கொன்னது யாருன்னு கண்டுபிடிக்க தீவிர புலன் விசாரணையில இறங்குனாங்க.செல்வகுமாருக்கு யார் கூடயாவது முன்பகை இருக்கான்னு, அவரோட பெற்றோர்கிட்டயும் ஊர் மக்கள் ஒருசிலர் கிட்டயும் போலிசார் விசாரிச்சாங்க. அதுல எந்த துப்பும் கிடைக்காததால, அடுத்ததா போலீஸ், செல்வக்குமாரோட செல்போன கைப்பற்றி, யார் யார்கிட்டலாம் அவர் கடைசியா ஃபோன்ல பேசிருக்காருங்குறத செக் பண்ணி பாத்தாங்க. அப்போ, அதே ஊர சேர்ந்த குமார் கிட்ட, செல்வக்குமார் கடைசியா செல்போன்ல பேசியிருந்தது தெரியவந்துச்சு. அதுக்கப்புறம், அந்த குமார பிடிச்சு விசாரிச்சப்ப தான், எல்லா உண்மைகளும் வெளில வர ஆரம்பிச்சது. காவேரிபுரத்துல உள்ள பாஸ்புட் கடையில வேலை பாத்துட்டு இருந்த செல்வகுமாரும், அதே ஊர சேர்ந்த குமாரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். ரெண்டு பேரும் நைட் நேரத்துல மது குடிக்குறது வழக்கம். அப்படி, வழக்கம்போல செல்வக்குமாரும், குமாரும் மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க. ரெண்டுபேருக்குமே ரெண்டுபேரோட சொந்தபந்தங்கள பத்தியும் நல்லா தெரியும். அதனால, மது குடிச்சிட்டு இருக்கும்போது சொந்தபந்தங்கள பத்தி பேசிட்டு இருக்கப்ப செல்வக்குமார், குமாரோட குடும்பத்த பத்தி இழிவா பேசுனதா தெரியுது. எங்க குடும்பத்த பத்தி பேசாதனு குமார் சொல்லியும் செல்வக்குமார் கேக்குறமாதிரி இல்ல. அன்னைல இருந்து செல்வக்குமார் மேல கொலைவெறில இருந்த குமார். சம்பவத்தனைக்கு சாயங்காலம் செல்வக்குமாருக்கு ஃபோன் செய்து, மது குடிக்குறதுக்கு போலாம்னு கூப்பிட்டுருக்கான். அப்ப, பாஸ்புட் கடையில வேலை பாத்துட்டு இருந்த செல்வக்குமார், நண்பன் குமார் கூப்பிட்டதும் கிளம்பி போக, ரெண்டு பேரும் பாஸ்புட் கடைக்கு பக்கத்துல ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துல உக்காந்து மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க.ஏற்கனவே செல்வக்குமார் மேல கோவத்துல இருந்த குமார், செல்வகுமாருக்கு மதுவ ஊத்தி ஊத்தி குடுத்திருக்கான். அதுக்கப்புறம், ஃபுல் போதையில இருந்த நண்பன் செல்வக்குமார கல்லால சரமாரியா தாக்கிருக்கான். அதுல, நிலைகுலைஞ்ச செல்வக்குமார், சம்பவ இடத்துலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாரு. அடுத்து, செல்வக்குமார் சடலத்த இழுத்துட்டு போய் பாஸ்புட் கடை வாசல்ல வீசிட்டு, தன்னோட பைக்க எடுத்துக்கிட்டு மின்னல் வேகத்துல எஸ்கேப் ஆகிருக்கான் குமார். செல்வக்குமார கொலை செய்யுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவர்கிட்டயே, உன்ன கொலை செய்யமா விடமாட்டேன்னு சொல்லிருக்கான். குமார் போதையிலதான் உளறான்னு செல்வக்குமார் அத பெருசா கண்டுக்காம இருந்துருக்காரு. செல்போன் நம்பர வச்சு தலைமறைவா இருந்த குமார பிடிச்சு விசாரிச்சதுல, செல்வக்குமார, குமார்தான் கொலை செஞ்சிருக்குறது உறுதியாகிருக்குது. இதுக்கு நடுவுல, கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாடி செல்வக்குமார் ஒரு கொலை கேஸ்ல சிக்கி ஜெயிலுக்கு போயிட்டு வந்ததும் விசாரணையில தெரிஞ்சிருக்குது. உயிருக்கு உயிரா பழகுன நண்பன கொடூரமா கொலை பண்ண குமார் மேல கொலை கேஸ் ஃபைல் செய்த காவல்துறையினர் அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க.