வாழை தோப்புக்குள் வீசிய ரத்த வாடை, மரத்தின் அருகில் இருந்த ரத்தம் படிந்த கத்தி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீஸ். இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, வாழை தோப்பில் குழி தோண்டி புதைத்த பயங்கரம். செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கிய காவல்துறை. கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்.? இவ்வளவு கொடூரமாக கொலை செய்து உடலை குழி தோண்டி புதைத்தது யார்.? நடந்தது என்ன.?வழக்கம்போல, காளான் சேகரிக்கிறதுக்காக, வாழை தோப்புக்கு போயிருக்காரு முருகேசன். தோப்புக்குள்ள கால எடுத்து வச்சதுமே பயங்கரமா ரத்த வாடை வீசவே, முருகேசன் சுத்தி பாத்துருக்காரு. அப்போ, ஒரு வாழை மரத்துக்கு அடியில ரத்தம் படிந்த கத்தியும், பக்கத்துலே குழி தோண்டப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்ததையும் பாத்துருக்காரு. இது எல்லாத்தையும் பாத்ததும் பதற்றமான முருகேசன், போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்காரு. கொஞ்ச நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, ரத்தம் படிந்த கத்தியை கைபற்றுன காவலர்கள், மோப்ப நாய வரவச்சு சோதனையில ஈடுபட்டாங்க. அப்போ, வாழை தோப்புல இருந்து 100 மீட்டர் தூரத்துல கடப்பாறையும், மண்வெட்டியையும் இருந்தத பாத்தவங்க, எதோ வில்லங்கமா நடந்துருக்கு அப்டிங்குறத உறுதி பண்ணாங்க. அதுக்குப்பிறகு, அங்க வித்தியாசமான முறையில மூடப்பட்டிருந்த குழியையும் தோண்ட ஆரம்பிச்சாங்க போலீஸ். அப்போ, அதுல ஒரு இளம்பெண்ணோட சடலம் புதைக்கப்பட்டிருந்தத பாத்து ஒட்டுமொத்த கிராமமே அரண்டு போய் நின்னுருக்காங்க. சடலத்த கைப்பற்றுன காவலர்கள் இந்த பொண்ணு யாரு.? இவங்கள யாரு இப்படி பண்ணதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அதுல எந்த துப்பும் கிடைக்கல. அடுத்ததா, பொண்ண காணோம்னு கம்ப்ளைண்ட் ஏதாவது வந்துருக்கான்னு அலசி ஆராஞ்சப்ப, ஆப்பக்கூடல் காவல் நிலையத்துல சோனியா-ங்குற ஒரு பொண்ணு காணோம்னு மிஸ்ஸிங் கேஸ் ஃபைல் ஆகிருந்துச்சு. அந்த கம்பளைண்ட் கொடுத்தவங்கள போலீஸ், நேர்ல வரவச்சு, குழியில இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இளம்பெண் சடலத்த காட்டியிருக்காங்க. அப்போதான், அந்த இளம்பெண் காணாமல் போனதா கம்பளைண்ட் கொடுத்தவங்களோட மகள்-ங்குறது உறுதியாச்சு.அதுக்குப்பிறகு, சோனியாவோட செல்போன் நம்பர வச்சு அவங்க கடைசியா யார் கூட பேசியிருக்காங்கன்னு செக் பண்ணதுல, மோகன்குமார்-ங்குற இளைஞரோட சோனியா நெறைய முறை ஃபோன் பேசிருக்குறது தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, கெட்டிசெவியூர் பகுதில இருந்த மோகன்குமார பிடிச்சு விசாரிக்க வேண்டிய விதத்துல போலீஸ் விசாரிச்சாங்க. அதுலதான், சோனியாவுக்கு நடந்த பல பகீர் உண்மைகளாம் வெளிய வந்துச்சு. ஈரோடு, புதுபாளையத்த சேந்த சோனியா - ராஜேந்திரன் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்காங்க. இந்த சூழல, ராஜேந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்னாடி ஒடம்பு சரியில்லாம உயிரிழந்துட்டாரு. புதுக்கரைப்புதூர் உள்ள பனியன் கம்பெனில வேல பாத்துதான் தன்னோட பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனிச்சிட்டு இருந்தாங்க சோனியா. இதுக்கு நடுவுல சோனியாவுக்கு அதே கம்பெனில வேலை பாத்த மோகன்குமாரோட பழக்கம் ஏற்பட்டிருக்குது. ஆரம்பத்துல, நண்பர்களா பேசி பழகுன சோனியாவும், மோகன்குமாரும் நாளடைவுல காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அடிக்கடி தனிமையில போய் காதல வளர்த்துட்டு வந்த சோனியாவும், மோகன்குமாரும் தனிமையில இருந்துருக்காங்க. ரெண்டு பேரும் ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்த நேரத்துலதான், மோகன்குமாருக்கு ஏற்கெனவே கல்யாணமாகிருச்சு அப்டிங்குற விஷயமே சோனியாவுக்கு தெரியவந்துருக்கு.கல்யாணமானத மறச்சி என்ன ஏமாத்திட்டியே, என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு இப்படி மோசம் பண்ணிட்டியேன்னு மோகன்குமார்கிட்ட பயங்கரமா சண்டை போட்டிருக்காங்க சோனியா. அதுமட்டுமில்லாம, என்னைய உடனே கல்யாணம் பண்ணிக்கனும், இல்லன்னா நடந்தத எல்லார்கிட்டயையும், முக்கியமா போலீஸ் கிட்ட சொல்லி உன்ன உள்ள தூக்கி வச்சு, எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுதிருவேன்னு கோவத்துல கொந்தளிச்சிருக்காங்க.தன்னால முடிஞ்ச அளவுக்கு சோனியாவ சமாதானப்படுத்த பாத்திருக்காரு மோகன்குமார். ஆனா, சோனியா உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி மோகன்குமார வற்புறுத்தியிருக்காங்க. அதனால, சோனியாவ கொன்னா தான் நிம்மதியா இருக்க முடியும்னு நினச்சு, அவங்கள கொலை பண்ண முடிவு பண்ணிருக்கான் மோகன்குமார். அதுக்கப்புறம், சோனியாகிட்ட சமாதானம் பேசுற மாதிரி பேசி, கெட்டிசெவியூர்ல உள்ள தன்னோட வாழைதோப்புக்கு கூப்பிட்டு போனவன், அவங்கள கீழ தள்ளிவிட்டு கத்தியால பல முறை கழுத்து பகுதில குத்தியும், கல்லால கொடூரமா தாக்கியும் கொன்னுருக்கான். கொலைய மறைக்கிறதுக்காக இரவோட இரவா வாழை தோப்புக்குள்ள குழிய தோண்டுன மோகன்குமார், சோனியா போட்டிருந்த ட்ரெஸ் எல்லாத்தையும் கழட்டிட்டு நிர்வாணமா அந்த குழிக்குள்ள போட்டு புதைச்சிட்டு எஸ்கேப் ஆகிருக்கான். சின்ன எவிடன்ஸ் கூட சிக்கிரக்கூடாதுங்குறதுக்காக, குழி தோண்ட பயன்படுத்தப்பட்ட கடப்பாறை, கத்தி எல்லாத்தையும் வாழை தோட்டத்துல மறைச்சி வச்ச மோகன், சோனியாவோட ஆடைகள தோப்புக்கு பக்கத்துல உள்ள குளத்துல வீசிட்டு எதுவும் தெரியாத மாதிரி வீட்டுல போய் இருந்துருக்கான். ஆனா, மறுநாளே அந்த தோட்டத்துக்கு முருகேசன் -ங்குறவரு காளான் சேகரிக்க போனப்ப பயங்கர ரத்த வாடை வீசவே போலீஸூக்கு இன்பார்ம் பண்ணிட்டாரு. மோகன்குமார பிடிச்சு விசாரிச்சதுல நடந்த எல்லாத்தையும் ஒன்னுவிடாம வாக்குமூலத்துல சொல்லிட்டான். அடுத்து, மோகன்குமார் மேல கொலை வழக்குபதிவு பண்ண போலீஸ் அவன அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிருக்காங்க.