நாமக்கல் அருகே நகைக்காக 80 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற எதிர்வீட்டுக்காரரை, அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். வெப்படை பாதரை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கண்ணம்மாள் வீட்டில் மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, எதிர் வீட்டில் வசிக்கும் எலக்ட்ரீசியன் சங்கர் சென்றுள்ளார். அப்போது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டு, மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.