மயிலாடுதுறை ஆள் கடத்தல் வழக்கில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது. திருவிழந்தூரை சேர்ந்த மணிகண்டன், சிதம்பரத்தை சேர்ந்த பழனிசாமியிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி 10 லட்சத்தை செலுத்தி விட்டார். மீதி 5 லட்சம் ரூபாய் கடனுக்காக, அவரது தந்தை நடராஜனை, பழனிசாமியின் அண்ணன் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் கும்பல் கடத்திச் சென்று கைவிரலை துண்டித்து சித்ரவதை செய்தது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மண்ரோடு பாண்டியனும் ஒருவன். இவன் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.