சென்னை புழல் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளியின் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி கே.எம் கார்டன் 6 ஆவது தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான தீபக், கஞ்சா பதுக்கிய வழக்கில் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 50 நாள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியே வந்த தீபக், முதல் மனைவியின் வீட்டில் மது அருந்தியவாறே பேசிக் கொண்டிருந்த போது உடல் குறைவு ஏற்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வழியிலேயே தீபக் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.