தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மீண்டும் நகராட்சி தலைவராக பதவியேற்க விடாமல் ஆணையர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக இருந்த சகுந்தலா, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கடந்தாண்டு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, பல்வேறு காரணங்களை கூறி, அவரை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்த நிலையில், தகுதி நீக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.