திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், விஜி ராவ் நகர் பகுதியில் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதாக குற்றம்சாட்டிய மக்கள் ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.