கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் பகுதியில் கடல் சீற்றத்தில் சேதமடைந்த துறைமுக முகத்துவார பகுதியை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார். கடல் சீற்றத்தால் 253 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த துறைமுக மறுசீரமைப்பு பணிகள் தடைபட்டதோடு, அதை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.