நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருத்துறைப்பூண்டி பங்கு தந்தை பீட்டர் டேனியன் துரைராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மைக்கேல் சம்மன்சு, புனித பாத்திமா அன்னை, சூசையப்பர், செபஸ்தியார், ஆரோக்கிய மாதா உள்ளிட்ட சொரூபங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை வந்தடைந்தன.