வடகிழக்கு பருவமழை பாதிப்பை தமிழ்நாடு அரசு முறையாக கையாளவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை என்று கூறினார். வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டியவர், வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்காததால் மழையால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.