நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ரிவர்ஸ் கியர் இயங்காமல், அரசு பேருந்து நடுவழியிலேயே நின்றதால் மக்கள் அவதியடைந்தனர். வழித்தட எண் 52 பேருந்து, சேலம் நோக்கி சென்ற போது ரவுண்டானாவில் திரும்ப முற்பட்டது. ஆனால் சற்று முன்னோக்கி சென்றதால், ஓட்டுநர் ரிவர்ஸ் கியரை போட முற்பட்டதாக தெரிகிறது. அப்போது பேருந்து பழுதாகி நின்றது.