கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் அதிகளவில் உள்ளே நுழைய முயன்ற போது, கதவுகளின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார்த்திகை திரையரங்கிற்கு வேட்டையன் திரைப்படத்தை காண ஆர்வமுடன் வந்திருந்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த கதவுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதால் ரசிகர்கள் அலறினர். பின்னர் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.