தோட்டத்தில் களை எடுத்துவிட்டு வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 45 வயது பெண். காட்டுக்குள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூரன். மதுபோதையில் மிருகமாக மாறிய கொடூரன் யார்? அந்த கொடூரன் சிக்கினானா?ஒரு நபரை அடிச்சி, தரதரன்னு இழுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துருக்காங்க விவசாயிகள். அடுத்து அந்த நபர்கிட்டயும், விவசாயிகள்கிட்டயும் காவலர்கள் விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், அடி வாங்கின நபர் யாரு? அந்த நபரை விவசாயிகள் ஏன் அடிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்தாங்கனு எல்லா கேள்விக்குமே பதில் தெரிஞ்சது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயசான முருகன். கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஒரு பொண்ண காதலிச்சி கல்யாணம் பண்ணிருக்காரு முருகன். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்காங்க. இதுக்கு மத்தியில கணவரோட நடவடிக்கைகள் பிடிக்காததாலும், தினமும் மது குடிச்சிட்டு வந்து டார்ச்சர் பண்ணதாலயும் பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு, தன்னோட தாய் வீட்டுக்கு போய்ட்டாங்க மனைவி. கடந்த 3 வருஷமா மனைவிய பிரிஞ்சி, தனியாதான் வாழ்ந்துட்டு இருக்காரு முருகன்.பொட்டலூரணியில உள்ள ஒரு மீன் பதப்படுத்தும் ஆலையில, சமையல் மாஸ்டரா வேலை பாத்துட்டு இருக்க முருகன், தினமும் பணி முடிஞ்சி மது குடிக்கிறது வழக்கம். அதேமாதிரி, வார விடுமுறை நாட்கள்ல மது குடிச்சிட்டு பக்கத்துல உள்ள கிராமங்கள்ல போய் சும்மா ஊர் சுத்துறதையும் முருகன் வழக்கமா வச்சிருக்காரு. அப்படி தான், தெய்வ செயல்புரம் பகுதிக்கு போய்ருக்காரு முருகன். அங்க உள்ள தன்னோட தோட்டத்துல களை எடுக்குறதுக்காக போய்ருந்தருக்காங்க 45 வயசு பொண்ணு. களை எடுக்குற வேலையை முடிச்சிட்டு திரும்ப வீட்டுக்கு தனியா நடந்து போயிட்டு இருந்துருக்காங்க அந்த பொண்ணு.எதிர்ல வந்த முருகன், அந்த பொண்ண தூக்கிட்டு காட்டுப்பகுதிக்கு போய் பாலியல் வன்கொடுமையில ஈடுபட்ருக்காரு. அப்போ, அந்த பொண்ணோட கூச்சல் சத்தத்த கேட்டு, ஓடிவந்த பக்கத்து தோட்டத்துல இருந்த விவசாயிகள், முருகனை சுத்தி வளைச்சி புரட்டி எடுத்துருக்காங்க. அவங்க அடிச்ச அடியில முதுகுப்பகுதியில அதிக காயமான முருகன், தூத்துக்குடி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ருக்காரு. முருகன் மேல புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ருக்குது. சிகிச்சைக்கு பிறகு முருகனை சிறையில அடைக்கப்போறதா காவல்துறை தரப்புல சொல்லப்பட்ருக்குது.இதுக்கு மத்தியில முருகன்மேல கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி தெய்வசெயல்புரம் கிராம மக்கள் போராட்டத்துலயும் ஈடுபட்ருக்காங்க. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | நொடியில் உயிரிழந்த 4 வயது சிறுவன், குழிதோண்டி புதைத்த காபி தோட்ட நிர்வாகம்