கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 11வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். எறையூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவி விளைநிலங்களில் தர்பூசணி பழத்தை பறித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்.