ரயிலில் அடிபட்ட மயிலுக்கு, முதலுதவி செய்து, உயிரைக் காப்பாற்றிய கேட் கீப்பருக்கு பாராட்டு குவிகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி ரயில்வே கேட் அருகே ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயில், பெண் மயில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மயில் ரயில்வே தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ரயில்வே கேட்கீப்பர் மற்றும் அவரது நண்பர்களான பிரவீன் குமார், விஜய் ஆகியோர் காயம் அடைந்த மயிலுக்கு ஓடோடி சென்று முதலுதவி சிகிச்சை தந்தனர். பின்னர், வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைத்தனர். திருப்பாச்சேத்தி கண்மாய் பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அவ்வப்போது ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது எதிர்பாராமல் ரயிலில் அடிபடும் மயில்கள் இறப்பது வாடிக்கையாகி வருகிறது.மயிலை காப்பாற்றிய ரயில்வே கேட் கீப்பருக்கு பாராட்டு குவிகிறது.