காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குப்பை கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள விளைநிலங்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காற்றின் வேகம் காரணமாக விளை நிலங்களில் மளமளவௌ தீப்பரவிய தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைத்தனர்.