சேலத்தில் மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்ய முயன்ற 9 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் புறநகர் பகுதிகளில் மண்ணுளி பாம்பை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கும்பல் சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் அடுத்த அரியானூர் பகுதியில் புதர்மறைவில் பதுங்கியிருந்த கும்பலை பிடித்து விசாரித்ததில் மண்ணுளி பாம்பை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.