நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள பொட்டல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மலை அடிவாரத்தில் உள்ள 80அடி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சேரன்மகாதேவியை சேர்ந்த சில இளைஞர்கள் இங்கு குளிக்க வந்துள்ளனர். இதற்கு பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இப்பகுதியில் மாலை நேரம் இங்கு யானை வரும் பகுதி ஆகையால் இங்கு குளிக்க வேண்டாம் என எச்சரித்ததாக கூறப்படுகிறது இதனால் இருதரப்புக்கும் இடையே மோதலும் உருவாகி உள்ளது. தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்ற நிலையில் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் கொண்ட கும்பல் பொட்டல் கிராமத்திற்குள் புகுந்து பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் அந்தோணி (வயது 29) மற்றும் கணேசன் ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேரன்மகாதேவியை சேர்ந்த 3 இளைஞர்களைப் பிடித்து கட்டி போட்டுள்ளனர். அப்போது தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வெட்டுப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்குள் நுழைந்து தாக்கியவர்களை தற்காப்பிற்காக பிடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசாரை கண்டித்து பொட்டலை சேர்ந்த கிராம 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பொது மக்களை தடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு நிலவிய மேலும் தொடர்ந்து போலீசார் நடத்திய 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பொட்டல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையும் படியுங்கள் : ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு