கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால், எதிரே வந்த லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முளகுமூடு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் இரண்டு பயணிகளுடன் வெள்ளிக்கிழமை ஆட்டோவில் கொல்லன்விளை பகுதியில் சென்றபோது, ஆட்டோவின் முன்சக்கரம் திடீரென கழன்று ஓடியதால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஒரு பயணி லேசான காயமடைந்த நிலையில் மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.